நமீபியா பயணத்தில் உள்ள பிரதமர் மோடி, இசைக் கலைஞர்களுடன் இணைந்து பாரம்பரிய இசைக்கருவியை வாசித்து மகிழ்ந்தார்
ஐந்து நாடுகளைக் சுற்றி பயணம் மேற்கொண்டு வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நேற்று தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நமீபியா நாட்டை சென்றடைந்தார்.
அவரது வருகையை முன்னிட்டு நமீபியாவின் தலைநகர் விண்ட்ஹோக்கிலுள்ள விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விமான நிலையம் முழுக்க உற்சாகமான சூழ்நிலையுடன் இருந்தது. அதில் பலர் கலந்துகொண்டனர், குறிப்பாக பல்வேறு இசை கலைஞர்கள் ஆர்வத்துடன் சேர்ந்திருந்தனர்.
அவர்களுள் சிலர், பாரம்பரிய தோல் இசைக்கருவிகளை – மேளம் போன்ற கருவிகளை – தட்டிச் இசைத்துக் கொண்டிருந்தனர். பிரதமர் மோடி அங்கு வந்தபோது, அவர்கள் வாசித்துக் கொண்டிருந்த அந்த பழங்கால இசைக்கருவிக்கு நெருக்கமாக சென்று, தனது கைகளால் அந்த கருவியை வாசித்து பார்த்தார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு, கலைஞர்களுடன் இசைக்கருவியை இசைத்த பிரதமர் மோடியின் செயலால், அங்கு இருந்த கலைஞர்கள் மேலும் உற்சாகமடைந்து, இசைக்கருவிகளை மேலும் உற்சாகத்துடன் வாசித்தனர். இந்த நிழற்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றன.