சென்னை – கூடூர் பாதையில் பணிகள்: 15 மற்றும் 17ஆம் தேதிகளில் 27 மின்சார ரயில்கள் ரத்து – மாற்று ஏற்பாடுகள் செய்த ரயில்வே நிர்வாகம்
சென்னை – கூடூர் ரயில்வழியில், கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி இடையே பொறியியல் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், ஜூலை மாதம் 15 மற்றும் 17ஆம் தேதிகளில் மொத்தம் 27 மின்சார ரயில்களின் இயக்கத்தில் தற்காலிக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ரத்து செய்யப்படும் ரயில்கள் விபரம்:
- சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி இடைப்பட்ட மின்சார ரயில்கள்:
ஜூலை 15 மற்றும் 17 ஆகிய நாட்களில், காலை 8.05, 9.00, 9.30, 10.30, 11.35 மணிகளில் புறப்படும் ரயில்கள் இயங்காது.
- சென்ட்ரல் – சூலூர்பேட்டை மின்சார ரயில்கள்:
அதே தேதிகளில் அதிகாலை 5.40, காலை 8.35, 10.15, நண்பகல் 12.10 மணிகளில் இயக்கப்பட வேண்டிய ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
மாறாக, சூலூர்பேட்டை – சென்ட்ரல் இடையே காலை 10.00, பகல் 11.45, 12.35, மதியம் 1.15 மணிகளில் இயக்கப்பட இருந்த ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.
- கடற்கரை – கும்மிடிப்பூண்டி இடையே:
ஜூலை 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் காலை 9.40, நண்பகல் 12.40 மணிகளில் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
- சூலூர்பேட்டை – நெல்லூர் மற்றும் நெல்லூர் – சூலூர்பேட்டை இடையிலான ரயில்கள்:
காலை 7.50 மணிக்கு சூலூர்பேட்டையிலிருந்து புறப்படும் ரயிலும், காலை 10.20 மணிக்கு நெல்லூரிலிருந்து புறப்படும் ரயிலும் ரத்து செய்யப்படுகின்றன.
- கும்மிடிப்பூண்டி – கடற்கரை ரயில்:
காலை 10.55 மணிக்கு இயக்கப்படும் ரயில் இரு நாட்களிலும் ரத்து செய்யப்பட உள்ளது.
- கும்மிடிப்பூண்டி – சென்ட்ரல் மின்சார ரயில்கள்:
காலை 9.10, 9.55, பகல் 11.25, நண்பகல் 12.00, மதியம் 1.00 மற்றும் பிற்பகல் 2.30 மணிகளில் புறப்படும் ரயில்கள் இயங்காது.
- ஆவடி – சென்ட்ரல்:
அதிகாலை 4.25 மணிக்கு புறப்பட வேண்டிய ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
- செங்கல்பட்டு – கும்மிடிப்பூண்டி ரயில்:
காலை 9.55 மணிக்கு செங்கல்பட்டிலிருந்து புறப்படும் ரயிலின் கடற்கரை முதல் கும்மிடிப்பூண்டி வரை பகுதி ரத்து செய்யப்படுகிறது.
- கும்மிடிப்பூண்டி – தாம்பரம் ரயில்:
பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் ரயிலின் கும்மிடிப்பூண்டி முதல் கடற்கரை வரை பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.
மாற்று ஏற்பாடுகள்:
மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதால் ஏற்படும் சிரமங்களை குறைக்க, அதே நாட்களில்:
- சென்னை சென்ட்ரல் – பொன்னேரி – எண்ணூர் இடையே பாசஞ்சர் சிறப்பு ரயில்கள் இயக்கம் செய்யப்படும்.
- மேலும், சென்னை கடற்கரை – மீஞ்சூர் இடையில் ஒரு சிறப்பு பாசஞ்சர் ரயிலும் இயக்கம் செய்யப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.