இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இம்மாதம் 10ஆம் தேதி, பிரபலமான லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த போட்டியை முன்னிட்டு இங்கிலாந்து அணி தேர்வு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணியில் வேகப்பந்து வீச்சாளராக கஸ் அட்கின்சன் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த மே மாதத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது அவர் தொடை பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அணியில் இருந்து விலகியிருந்தார். தற்போது அவர் முழுமையாக குணமடைந்ததால், மீண்டும் தேர்வுச் செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து அணி விவரம்:
பென் ஸ்டோக்ஸ் (தலைவர்), ஸாக் கிராவ்லி, பென் டக்கெட், ஒலி போப், ஹாரி புரூக், ஜேக்கப் பெத்தேல், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், ஜேமி ஓவர்டன், ஷோயிப் பஷிர், பிரைடன் கார்ஸ், சாம் குக், ஜோஷ் டங்க், ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன்.