சத்தீஸ்கர் மாநிலத்தின் தண்டேவாடா மாவட்டத்தில், 2 பெண்கள் உட்பட மொத்தம் 12 நக்சலைட்கள் போலீசாரும், மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை (CRPF) அதிகாரிகளும் முன்னிலையில் தனது ஆயுதங்களை ஒப்படைத்து, சட்டத்துக்கு உட்பட்டு வாழ ஒப்புக்கொண்டனர்.
இந்த 12 பேரில், அரசால் ரூ.28.50 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த 9 முக்கிய நக்சலைட்கள் அடங்குவார்கள்.
‘உங்கள் வீடு, உங்கள் கிராமத்துக்கே திரும்புங்கள்’ என்ற மாநில அரசின் மறுவாழ்வு ஊக்குவிப்பு திட்டத்தின் வாயிலாக, இதுவரை தண்டேவாடா மாவட்டத்தில் 1,005 நக்சலைட்கள் சீர்திரும்பி சமுதாயத்துடன் இணைந்துள்ளனர்.
இவ்வாறு பலர் நக்சல் பாதையை விட்டு விலகி வருகின்றனர் என்பது, அரசின் நீண்டகால திட்டமிடல், பாதுகாப்புப் படைகள் மேற்கொள்ளும் தொடர் முயற்சிகள் மற்றும் மக்களிடையே ஏற்பட்டு வரும் நம்பிக்கையின் வளர்ச்சியை நன்கு வெளிப்படுத்துகிறது.
மாவோயிஸ்ட் இயக்கத்தின் வெற்றிடமான கோட்பாடுகளால் பாதிக்கப்பட்டிருந்த இளைஞர்கள், இப்போது நல்வழியை நாடி சமுதாய வாழ்வில் மீண்டும் இணைந்து வருவது வரவேற்கத்தக்க முன்னேற்றமாகும்.