உக்ரைனில் வசிக்கும் மக்களை ரஷ்யா அழித்துவிட முடியாதது போலவே, காசா மற்றும் பாலஸ்தீனத்தில் வாழும் மக்களை இஸ்ரேலும் நாசம் செய்ய இயலாது என்று, முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் காங்கிரசின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சமூக வலைதளமான எக்ஸ்-இல் வெளியிட்டுள்ள பதிவில்,
“ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மக்களை பெருமளவில் கொலை செய்யும் ஒருவராக இருப்பதை, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தற்போது தான் புரிந்து கொண்டுள்ளார். இந்தக் கண்டனம் புதினுக்கே மட்டுமல்ல; அதே அளவில், இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும் பொருந்தும்.
உக்ரைனில் வாழும் மக்களை முழுமையாக அழிக்க ரஷ்யா முயன்றாலும், அது சாத்தியமல்ல. அதேபோல், பல தலைமுறைகள் வாழ்ந்து வரும் பாலஸ்தீனியர்களை அவர்கள் தாயகத்தில் இருந்து இஸ்ரேல் முற்றிலும் அழிக்க முடியாது.
இதற்கேற்ப, திருவள்ளுவர் 2300 ஆண்டுகளுக்கு முன்னரே கூறியுள்ளார்:
‘சிறை நலனும் சீரும் இலர் எனினும் மாந்தர்
உறை நிலத்தோடு ஒட்டல் அரிது’
அதாவது, ஒரு நாட்டில் வாழும் மக்களிடம் கூடுபெரிய பாதுகாப்போ, புகழோ இல்லாதபோதிலும், அவர்கள் பூர்வீகமாக வாழும் நிலத்துக்குள் நுழைந்து அவர்களை அடக்குவது மிகவும் கடினம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.