ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு 5 ஆண்டுகள் ஆன நிலையில், அங்குள்ள மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
இதுகுறித்து, X பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியலமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் புதிய மாற்றத்தின் சகாப்தம் தொடங்கியுள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களின் இலக்கை அடைவதற்காக ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
மேலும், ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சியடையாத பெண்கள், இளைஞர்கள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக பிரதமர் மோடி வீடியோவில் தெரிவித்துள்ளார்.
அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம், ஜம்மு காஷ்மீரில் பல ஆண்டுகளாக இருந்து வந்த ஊழல் முடிவுக்கு வந்துள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.
காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் எதிர்பார்ப்புகளை விரைவில் நிறைவேற்றுவதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.