பாராலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 200 மீட்டர் டி35 போட்டியில் இந்தியாவின் பிரீத்தி பால் வெண்கலப் பதக்கம் வென்றார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான 17வது பாராலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்து வருகிறது. இதில் உலகம் முழுவதிலுமிருந்து 4,400 விளையாட்டு வீரர்கள் மற்றும் பெண்கள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 ஆண், பெண் வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
5வது நாளான நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 200 மீட்டர் டி35 போட்டியில் இந்திய வீராங்கனை பிரீத்தி பால் 30.01 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார். முன்னதாக பெண்களுக்கான 100 மீட்டர் டி35 போட்டியில் ப்ரீத்தி பால் வெண்கலம் வென்றார். பிரீத்தி பால் தனது இரண்டாவது வெண்கலத்துடன் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை 6 ஆக உயர்த்தினார்.
23 நிறுவனங்களை தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு விற்றுவிட்டது: கார்கே
நாட்டில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட 160 பொதுத்துறை நிறுவனங்களில், 23 நிறுவனங்களை தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு விற்றுவிட்டதாகக் காங்கிரஸ் தலைவர்...