ஜூலை 18ஆம் தேதிக்கு சுமார் 11 திரைப்படங்கள் வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் ஆகஸ்ட் 14ஆம் தேதி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் திரைக்கு வர உள்ளது. அதற்கு முன்னதாகவே, பல திரைப்படங்கள் வெளியீட்டுக்குத் திட்டமிடப்பட்டுள்ளன. இதனால், திரைப்பட விநியோகஸ்தர்களிடமும், திரையரங்க உரிமையாளர்களிடமும் பெரும் குழப்பம் மற்றும் தயக்க நிலை உருவாகியுள்ளது.
ஜூலை 18ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட படங்கள்:
ஜென்ம நட்சத்திரம், பன் பட்டர் ஜாம், டைட்டானிக், காலம் புதிது, கெவி, சென்ட்ரல், ஆக்நேயா, ஆக்கிரமிப்பு, யாதும் அறியான், நாளை நமதே மற்றும் ட்ரெண்டிங் — என ஒருே நாளில் 11 படங்கள் வெளியீடாகும் என விளம்பரங்கள் வெளியாகி வருகின்றன.
இந்த பட்டியலில் இருந்து மிக அதிகபட்சம் இரண்டு படங்களே பொதுமக்களில் கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில் தெரிகின்றன. மீதமுள்ள திரைப்படங்கள் பெரும்பாலும், வெளியீடு மட்டும் செய்துவிட வேண்டும் என்ற நெருக்கடியால் திரைக்கு வருகிறதுபோலவே காணப்படுகின்றன. காரணம், ஒரு நாளில் 11 படங்கள் வெளிவந்தால், ஒவ்வொரு படத்திற்கும் அதிகபட்சமாக 70 திரையரங்குகள்தான் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
மேலும், தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘மார்கன்’ மற்றும் ‘3 பி.எச்.கே’ ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகின்றன. ஆனால் அதன்பின் வெளிவந்த பல திரைப்படங்கள் வெற்றியில்லாமல் தளர்ந்து விட்டன. இந்த வாரம் வெளியாகும் படங்களுக்கு என்ன நிலைமை ஏற்படப் போகிறது என்பது இன்னும் சில நாட்களில் தான் தெளிவாகப் புரியும்.