பெரும் நாட்டுகள் ஐந்திற்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் நரேந்திர மோடி, நேற்று நமீபியா நாட்டின் தலைநகர் விண்ட்ஹோக்கில் உள்ள விமான நிலையத்தை அடைந்தார். அவருக்காக விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அவரை வரவேற்க நமீபியாவின் பாரம்பரிய இசைக்கலைஞர்கள் ஏராளமாக குவிந்திருந்தனர். அந்த கலைஞர்கள், மேளம் போன்ற தோலால் உருவாக்கப்பட்ட ஒரு பழமையான இசைக்கருவியை வாசித்து, தங்கள் கலாச்சார வரவேற்பை வெளிப்படுத்தினார்கள்.
அந்த நேரத்தில் அங்கு சென்ற பிரதமர் மோடி, கலைஞர்களின் இசையை ரசித்ததோடு நிற்காமல், அவர்களுடன் சேர்ந்து தானும் அந்த பழங்கால இசைக்கருவியை தனது கைகளால் வாசித்து மகிழ்ந்தார்.
மோடியின் அந்த இசைபங்கேற்பு கலைஞர்களிடையே கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியது. அவர்கள் மேலும் உந்துதலுடன் தங்கள் கருவிகளை வாசித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.