பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு ஆம்ஸ்ட்ராங் அவர்கள், சென்னையில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட செய்தி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரமான நேரத்தில், அவரது குடும்பத்தினர் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தொண்டர்கள் அனைவருடனும் தமிழக பாஜக ஆறுதலாகத் துணை நிற்கிறோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
நம் சமூகத்தில், வன்முறைக்கும் மிருகத்தனத்துக்கும் இடமில்லை, ஆனால் கடந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சியில், தமிழகத்தில் அதுவே வழக்கமாகி விட்டது.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துவிட்டு, மாநிலத்தின் முதல்வராகத் தொடரும் தார்மீக உரிமை தனக்கு இருக்கிறதா என்று, திரு.ஸ்டாலின் அவர்கள் தன்னையே கேட்டுக்கொள்ள வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.