அமெரிக்காவின் யுஜின் நகரில் நடைபெற்று வரும் ப்ரீஃபோன்டைன் கிளாசிக் என்ற புகழ்பெற்ற தடகள போட்டியில், பெண்கள் 5000 மீட்டர் ஓட்டப் போட்டி பெரும் கவனத்தை பெற்றது. இந்த போட்டியில் கென்யாவைச் சேர்ந்த பீட்ரைஸ், 13 நிமிடங்கள் 58.06 விநாடிகள் என்ற நேரத்தில் தூரத்தை கடந்துகொண்டு உலகச் சாதனையை ஏற்படுத்தி முதலிடத்தை கைப்பற்றினார்.
முன்னதாக, எத்தியோப்பியாவின் குடாஃப் செகே, இதே தூரத்தை 14 நிமிடங்கள் 00.21 விநாடிகளில் கடந்திருந்தார். அந்த சாதனையே இதுவரை உலகக் கோப்பையில் சிறந்ததாகக் கருதப்பட்டது. ஆனால், பீட்ரைஸ் தனது அதிவேக ஓட்டத்துடன் அந்த சாதனையை முறியடித்து, புதிய உலகக் கின்னஸ் சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
Facebook Comments Box