ரஷ்யாவில் சிறுமிகள் தாயாகும் திட்டம் – பின்னணி, விமர்சனங்கள் மற்றும் உலகப் பார்வை

0

ரஷ்யாவில் சிறுமிகள் தாயாகும் திட்டம் – பின்னணி, விமர்சனங்கள் மற்றும் உலகப் பார்வை

ரஷ்யாவின் சில பகுதிகளில் தற்போது டீன் ஏஜ் மாணவிகள், அதாவது பள்ளியில் பயிலும் குறைந்த வயதிலுள்ள பெண்கள், குழந்தைகளை பெற்றெடுக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். இந்தக் கொள்கையின் கீழ், அவர்கள் தாயாகினால் இந்திய ரூபாயில் 1 லட்சம் வரை நிதி உதவித் தொகை வழங்கப்படுகிறது. ரஷ்யாவின் 10 மாகாணங்களில் கடந்த சில மாதங்களாகவே இந்த திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இந்த நடவடிக்கைக்கு உள்ளூரிலும், சர்வதேச அரங்கிலும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்தத் திட்டம் நேரடியாக அதிபர் விளாடிமிர் புதினின் உத்தரவின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டதால், அதற்கு எதிரான கருத்துக்களை மிக விரைவாக அடக்கப்படுவது மிகுந்த ஆச்சரியத்திற்குரியதல்ல. அதிகாரபூர்வ தகவல்களின் படி, ரஷ்யாவின் மக்கள் தொகை கடந்த சில ஆண்டுகளில் கணிசமாகக் குறைந்துவருவதால், இந்த மாதிரியான திட்டங்களை கொண்டு வந்ததாகவும் அரசு கூறுகிறது. ஆனால், இந்த நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியவையா என்பதுதான் சரியான கேள்வி.

திட்டத்தின் தொடக்கம் – வரலாறும் மாற்றமும்

2025ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில், ரஷ்யா அதிக குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் வகையில் பெண்களுக்கு பல சலுகைகள் அறிவித்தது. அப்போதைய சலுகைகள் தாய்மை பெறுவதற்குத் தகுதியான வயதினருக்கே மட்டும் வரையறுக்கப்பட்டிருந்தன. ஆனால், தற்போதைய திட்டம் பள்ளி மாணவிகளை (டீன் ஏஜ்) குழந்தைகளைப் பெற்றெடுக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. இதற்காக அவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை நிதி வழங்கப்படுகிறது.

இதைப் பின்னணியாகக் கொண்டே, ரஷ்யாவின் மக்கள் பிறப்பு விகிதம் 2023இல் 1.41%ஆக குறைந்திருந்தது. ஆனால், ஒரு நாட்டின் மக்கள்தொகையை நிலைநிறுத்த, 2.05% பிறப்பு விகிதம் தேவைப்படும். இந்த விகித மாறுபாடு தான் தற்போது ரஷ்யா ஏன் இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதற்கான முதன்மையான காரணமாக கருதப்படுகிறது.

மக்கள் கருத்துகள் – ஒப்புதலும் எதிர்ப்பும்

இத்திட்டம் தொடர்பாக ரஷ்யா நடத்திய கருத்துக் கணிப்பில், 43% பேர் திட்டத்திற்கு எதிராகவும், 40% பேர் ஆதரவாகவும் இருந்தனர். இரண்டும் மிக அருகிலுள்ள எண்ணிக்கைகள் என்பதால், இளம் மாணவிகள் தாயாகும் போக்கு சமூகத்தில் இயல்பான ஒன்றாகவே நடந்து வருகின்றது.

புதினின் நோக்கம்

ரஷ்ய அதிபர் புதின், ஒரு நாட்டின் வலிமை அதன் மக்கள்தொகையின் பெருமைதான் என்ற தன்னம்பிக்கையில் இருக்கிறார். அதிக மக்கள் தொகை இருந்தால் நிலங்களை முழுமையாக ஆக்கிரமிக்க முடியும், ராணுவ பலம் அதிகரிக்கிறது என்பதே அவரது நம்பிக்கை. இதற்காகவே உக்ரைனை ஆக்கிரமிக்கவும் முனைந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், மக்கள் தொகை சுருங்குவதும், போரில் உயிரிழப்பும் ரஷ்யாவை பெரும் அழுத்தத்துக்குள்ளாக்கியிருக்கிறது. 2.5 லட்சம் ரஷ்ய வீரர்கள் இறந்திருக்கிறார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. பல இளைஞர்கள் போரில் ஈடுபடாமல் உயிர்வாழ முயல்கின்றனர்.

இதுவே உலகளாவிய சவால்

இந்த மக்கள் தொகை குறைபாடு ரஷ்யாவுக்கே உரியது அல்ல. 2050க்குள் உலகின் மூன்றில் ஒரு பங்கு நாடுகளில் பிறப்பு விகிதம் குறையும் என கணிக்கப்படுகிறது. இதனால் பல நாடுகள் ‘ப்ரோநேட்டலிஸ்ட் பாலிசி’ என அழைக்கப்படும் குழந்தைப் பிறப்பை ஊக்குவிக்கும் திட்டங்களை வகுத்துள்ளன.

  • ஹங்கேரி – மூன்றுக்கு மேல் குழந்தை பெற்றால் வரி சலுகை வழங்குகிறது.
  • போலந்து – இரண்டுக்கு மேல் குழந்தை பெற்ற குடும்பங்களுக்கு மாதம் ரூ.1 லட்சம் மதிப்பில் நிதி வழங்குகிறது.
  • அமெரிக்கா – ட்ரம்ப் தலைமையில், குழந்தை பெற்ற பெண்களுக்கு 5,000 டாலர் ஊக்கத்தொகை வழங்கும் யோசனை முன்மொழியப்பட்டது.

ஸ்பெயின் – ஒரு மாறுபட்ட பாணி

பல நாடுகள் நிதி ஊக்கத்திலும், வரிச் சலுகையிலும் கவனம் செலுத்தியிருந்த போதும், ஸ்பெயின் மட்டும் ஒரு புதிய வழியைத் தேர்ந்தெடுத்தது. குடியேறுவோருக்குப் பெருமளவில் குடியுரிமை வழங்கும் திட்டம் மூலம், குறைந்த மக்கள் தொகையை சமன்செய்ய முயற்சி எடுத்தது. இதனால் அதன் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தது. ஆனால், இந்த சலுகைகள் எல்லோருக்கும் இல்லை – ஸ்பெயினில் குறிப்பாக ஸ்பானிஷ் பேசும் கத்தோலிக்க குடியேறிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

ஹங்கேரி – ஹெட்டரோசெக்ஸுவல் தம்பதிகள் மற்றும் அதிக வருமானம் உள்ளவர்களுக்கு மட்டுமே உதவி.

அமெரிக்கா – ட்ரம்ப், அமெரிக்கர்களுக்கே மக்கள் தொகை அதிகரிக்க வேண்டும் என்பதில் உறுதியுடன் இருக்கிறார். சட்டவிரோத குடியேறிகளை விரட்ட வேண்டும் என்பதும் அவரது நோக்கம்.

வரலாற்றை மீண்டும் பயன்படுத்தும் புதின்

புதிய திட்டங்கள் மட்டுமின்றி, ஸ்டாலின் காலத்தில் இருந்த “மல்டிபிள் மாதர்களுக்கான பதக்கம்” கொடுக்கும் திட்டத்தை புதினும் மீண்டும் கொண்டு வந்துள்ளார். 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்ற தாய்மார்களுக்கு சிறப்புப் பதக்கம் வழங்கப்படுகிறது. மேலும், குழந்தை பேறுக்கு எதிரான தகவல்களைத் தடை செய்யும் சட்டம் வரை இயற்றப்பட்டுள்ளது. குழந்தை பெற மறுப்பதற்கே ஒரு பெண்ணுக்கு உரிமை இல்லாமல் இருக்கிறது.

பெண்களின் பார்வை

பல நாடுகள் மக்கள் தொகையை அதிகரிக்க பெண்களை தியாகம் செய்ய வைக்கின்றன. ஆனால், பெண்கள் இந்த முடிவுகள் தனிநபர் உரிமையை மீறுவதாகக் கருதுகிறார்கள். ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி உழைக்கும் மக்கள் மூலமாகவே வரும். அதற்கு குடியேற்றம், கல்வி, வேலை வாய்ப்புகள் என பல்வேறு வழிகள் உள்ளன. இன, மத, மொழி சார்ந்து மக்கள் தொகையை கட்டுப்படுத்த விரும்பும் அரசாங்கம், பெண்களின் உடல், உரிமைகளை தாண்டி ஒரு இனம் சார்ந்த கட்டமைப்பை உருவாக்க முயல்கிறது என்று விமர்சிக்கின்றனர்.

Facebook Comments Box